மாஸ்டர் சாதனையை பின்னுக்குத் தள்ளிய கேஜிஎப் 2 டீசர்!

மாஸ்டர் சாதனையை பின்னுக்குத் தள்ளிய கேஜிஎப் 2 டீசர்!

கேஜிஎப் - மாஸ்டர்

கேஜிஎப் 2 டீசர் 10 மணிநேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது.

  • Share this:
விஜய்யின் மாஸ்டர் பட டீசர் செய்திருந்த சாதனையை, கேஜிஎப் படத்தின் டீசர் முறியடித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இப்படம், நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

கேஜிஎப் 2 படத்தின் டீசர் நேற்று இரவு வெளியானது. அப்போதிலிருந்து யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது இந்த டீசர். அதன்படி 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய திரைப்படத்தின் டீசர் என்ற சாதனையை கேஜிஎப் 2 படைத்துள்ளது. இதற்கு முன் 1.85 மில்லியன் லைக்குகளை பெற்று மாஸ்டர் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது கேஜிஎப் 2 டீசர் 10 மணிநேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: