ரசிகர்கள் எதிர்பார்த்த கே.ஜி.எஃப் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கே.ஜி.எஃப் 2

'கே.ஜி.எஃப்' திரைப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அதன் இரண்டாம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 • Share this:
  ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள கே.ஜி.எஃப் 2 படத்தின் அறிவிப்பு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

  கன்னடத்தில் இயக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் கே.ஜி.எஃப். இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகமான 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  'கே.ஜி.எஃப்' திரைப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அதன் இரண்டாம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

  சமீபத்தில் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு, 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதையடுத்து படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படம் ஜூலை 16, 2021-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: