Home » News » Entertainment » KERALA THEATRES REOPEN VIJAY MASTER MOVIE FIRST RELEASE MSB

கேரளாவில் திரையரங்குகள் திறந்ததும் முதலில் ரிலீசாகும் மாஸ்டர்

கேரளாவில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல் படமாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரிலீசாகிறது.

கேரளாவில் திரையரங்குகள் திறந்ததும் முதலில் ரிலீசாகும் மாஸ்டர்
மாஸ்டர்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கேரளாவில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க கேரள அரசு அனுமதி அளித்திருக்கிறது.

கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் வெளியாகும் முதல்படமாக நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் அமைந்திருக்கிறது. நாளை சுமார் 350 தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு, ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்களா என்பதைப் பார்த்து அதன் பின்னரே மலையாள படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 80 மலையாளப் படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

10 மாதங்களுக்குப் பின் தியேட்டர்கள் திறக்கப்படுவதால் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கேளிக்கை வரியை ரத்து செய்திருக்கும் கேரள அரசு மின்சார கட்டணத்திலும் 50% சலுகை வழங்கியுள்ளது


தமிழகத்தைப் போல் கேரளாவிலும் விஜய்க்கு அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால் மாஸ்டருக்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை மாஸ்டர் ரிலீசுக்கு 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து பின்னர் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருக்கிறது.

மேலும் படிக்க: மாஸ்டர் இணையத்தில் கசிந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்இதனிடையே கடைசி நேரத்தில் மாஸ்டர் படத்தை இணையத்தில் கசிய விட்டிருப்பதும் படக்குழுவுக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் நாளை மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை வெளியான விஜய் படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading