வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: விஜய் ரசிகர்கள் நிவாரண உதவி

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: விஜய் ரசிகர்கள் நிவாரண உதவி
நிவாரண உதவி வழங்கும் விஜய் ரசிகர்கள்
  • News18
  • Last Updated: August 13, 2018, 4:27 PM IST
  • Share this:
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருவனந்தபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்களுக்கு இலவசமாக அரிசி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது

கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகள் அனைத்தும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டுள்ளன. நேற்று இடுக்கி மாவட்டம் செருதோணி அனையை திறந்துவிட அரசு முடிவெடுத்து திறந்து விட்டதில் சிருதோணி பஸ் நிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ளம் ஆலுவா நகரத்தையும் மூழ்கடித்தது. நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இதனால் பாலக்காடு , மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கும்படி முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பலரும் துயர் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் ₹25 லட்சமும், கமல்ஹாசனும் ₹25 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.

இதைதொடர்ந்து இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளா மாநிலத்தில் மழையினால் பாதிக்கப்பபட்டுள்ள திருவனந்தபுரம் பகுதியில் மக்களுக்கு இலவசமாக அரிசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான இடுக்கி ,வயநாடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் சரிசெய்யும் பணி முடிந்ததும் பெரிய அளவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
First published: August 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading