கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்: ₹10 லட்சம் நிதியுதவி

கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்: ₹10 லட்சம் நிதியுதவி
நடிகர் விஷால்
  • News18
  • Last Updated: August 18, 2018, 1:38 PM IST
  • Share this:
நடிகர் விஷால் கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் வழங்குகிறார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. 10 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மழை குறைந்தது. இதனால், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மீண்டும் மழை பெய்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் மலப்புரம் மாவட்டத்தில் 11 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 24 பேர் உயிரிழந்தனர். இதனால், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது. ஒன்றரை லட்சம் பேர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழையால் கேரளாவிலிருக்கும் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


இதையடுத்து, கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளாவுக்கு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ரோகிணி ஆகியோர் நிதி உதவி அளித்திருந்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்பட்டிருந்தது.
First published: August 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading