கேரளாவிற்கு நடிகர் தனுஷ் ₹15 லட்சம் நிதியுதவி

கேரளாவிற்கு நடிகர் தனுஷ் ₹15 லட்சம் நிதியுதவி
தனுஷ்
  • News18
  • Last Updated: August 18, 2018, 1:38 PM IST
  • Share this:
நடிகர் தனுஷ் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ₹15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. 10 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மழை குறைந்தது. இதனால், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மீண்டும் மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


கேரளாவில் மழை வெள்ளத்தால் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 1,65,538 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,857 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 3,393 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ₹15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் கேரள மக்களுக்காக நிதிஉதவி செய்ய தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நடிகர் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் கேரளாவிற்கு நிதியுதவி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: August 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading