ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கைதி இரண்டாம் பாகத்துக்கான தடையை நீக்கியது நீதிமன்றம்

கைதி இரண்டாம் பாகத்துக்கான தடையை நீக்கியது நீதிமன்றம்

கைதி

கைதி

Karthi Kaithi : 2019 இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கைதி. தற்போது அந்தத் தடையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

2019 இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கைதி. இந்தப் படத்தை ரீமேக் செய்யவும், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் கேரள நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தற்போது அந்தத் தடையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தின் கதை என்னுடையது என கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2007 ஆம் ஆண்டு புழல் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து கதையாக்கி அதனை ட்ரீம் வாரியர் நிறுவனத்தின்  எஸ் ஆர் பிரபுவிடம் கொடுத்ததாகவும், அவரும் அதை படம் பண்ண விருப்பம் தெரிவித்ததாகவும், முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் தந்ததாகவும் ராஜீவ் ரஞ்சன் கூறியிருந்தார்.

அந்தக் கதையின் இரண்டாம் பகுதியை எடுத்து, தனது கவனத்திற்கு வராமல் கைதி திரைப்படத்தை எஸ்ஆர் பிரபு எடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனால் தனக்கு நான்கு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும், கைதியை வேறு மொழியில் ரீமேக் செய்யவும் தடை விதித்தது. இந்நிலையில் நீதிமன்றம் அந்த இடைக்கால தடையை ரத்து செய்ததுடன், ராஜீவ் ரஞ்சன் தாக்கல் செய்த நஷ்ட ஈடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது என  ட்ரீம் வாரியர்  நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு இருந்த தடை நீங்கி உள்ளது. பிற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான தடையும் இதன் மூலம் விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

கைதியை இந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். சமீபத்தில் இந்தப் படத்துக்கான கெட்டப்பை அஜய் தேவ்கான் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Actress Karthi, Court, Kaithi, Kerala