150 நபர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்

news18
Updated: August 10, 2018, 7:47 PM IST
150 நபர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்
இயக்குநர் லிங்குசாமியுடன் கீர்த்தி சுரேஷ்
news18
Updated: August 10, 2018, 7:47 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் பரிசை வழங்கி அசத்தியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இதில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் தொடர்ச்சியாக சண்டக்கோழி 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஷாலுடன் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வரும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சண்டக்கோழி 2 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினருக்கு தங்க நாணயங்களை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். இதை படத்தின் மக்கள் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நடிகையர் திலகம் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தங்க நாணயங்களை பரிசளித்திருந்தார்.

Loading...
சண்டக்கோழி படத்தின் முதல்பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீராஜாஸ்மின் குறும்புக்கார பெண்ணாக நடித்திருந்தார். அக்கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல் சண்டக்கோழி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...