நடிகை கீர்த்தி சுரேஷ் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.தனது முதல் படத்தில் பாராட்டுகளை பெறவில்லை என்றாலும்,அடுத்தடுத்து நடித்த ரஜினி முருகன்,ரெமோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் பைரவா திரைப்படத்தில் இணைந்து நடித்தார்.
இதையடுத்து 2017 ஆம் ஆண்டு இவர் ‘மகாநதி’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் வெளிகாட்டிய நடிப்பு திறமைக்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார்.
அதன்பின் இவரின் நடிப்பில் வெளியான பெண்குயின். மிஸ் இந்தியா ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என சில விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் தோளில் வெள்ளை புறாக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஸ்பெயின் டைரீஸ் என்ற பெயரில் இந்த புகைப்படங்ளை வெளியிட்டுள்ளார்.
மேலும் கீர்த்தி தற்போது சாணி காயிதம், அண்ணாத்த ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களிலும்,அய்னா இஸ்தம் நுவ்வு என்ற தெலுங்கு படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
Published by:Tamilmalar Natarajan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.