'என்னையே வெறுத்தேன். வாழ்நாளே போராட்டமாக இருந்தது’ - எடை குறைப்பு குறித்த போஸ்ட்டில் கீர்த்தி சுரேஷின் அன்பை மெச்சிய சகோதரி..

'என்னையே வெறுத்தேன். வாழ்நாளே போராட்டமாக இருந்தது’ - எடை குறைப்பு குறித்த போஸ்ட்டில் கீர்த்தி சுரேஷின் அன்பை மெச்சிய சகோதரி..

கீர்த்தி சுரேஷ் உடன் ரேவதி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி 20 கிலோவிற்கும் மேலாக தனது உடல் எடையைக் குறைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, செல்வராகவன் உடன் சாணிக்காயிதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஒரு சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது சகோதரி ரேவதி சுரேஷ் உடல் எடையைக் குறைத்திருப்பதை அறிந்து தான் பெருமைப்படுவதாக கூறியுள்ளார். உடல் எடை அதிகமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ரேவதி சுரேஷ், “நான் அதிக எடையுடன் குண்டாக இருந்ததால் என்னை எப்போதும் என் தாய் மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு பலரும் விமர்சிப்பார்கள். யாரென்று தெரியாதவர்கள் எல்லாம் எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்து நானே வெறுக்க ஆரம்பித்தேன். என்னை எனது சகோதரி கீர்த்தி சுரேஷ் எப்போதும் பாதுகாத்திருக்கிறார். அவர் தனது நண்பர்கள் அனைவரும் என்னை விட உன்னை தான் பிடித்திருக்கிறது என்று சொல்லியதாக என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு நான் சிரித்தேன். என்னை வலிமையான, திறமையான பெண்ணாக பார்ப்பதாக எனது அம்மா என்னிடம் கூறியிருக்கிறார். அதையே என் கணவரும் சொல்லக்கேட்கும் போது வியப்பாக இருந்தது.
எனது யோகா டீச்சர் தாரா கல்யாண் எனக்குள் இருக்கும் பலத்தை புரிய வைத்து எனக்கு பயிற்சி அளித்தார்கள். அதன் விளைவாக இப்போது 20 கிலோவுக்கும் மேல் எடை குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.

தனது சகோதரியின் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், “அப்படி போடு லவ், லவ், லவ். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: