ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கீர்த்தி சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்..

கீர்த்தி சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்..

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், புதிய படங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழின் இரு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்பு வந்துள்ளது.

தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காயிதம் படம் தயாராகிறது. செல்வராகவன் இதில் முக்கிய வேடமேற்றுள்ளார். ரஜினியுடன் நடித்திருக்கும் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதன் கொல்கத்தா இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மரக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் ஆகஸ்ட் 12 வெளியாகியிருக்க வேண்டியது. மோகன்லால் நடிப்பில், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இப்படம், திரையரங்குகள் கேரளாவில் இன்னும் திறக்கப்படாததால் தள்ளிப் போயுள்ளது. இது தவிர வாசி என்ற மலையாளப் படமும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகி வருகிறது

தெலுங்கில் ஆதி, ஜெகபதி பாபுடன் குட்லக் சகி என்ற நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மகேஷ் பாபுடன் நடித்துவரும் சரக்கு வாரி பாட்டா 2022 ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. மூன்று மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துக் கொண்டிருப்பவருக்கு மேலும் இரு வாய்ப்புகள் வந்துள்ளன. கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர். அதேபோல் ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவும் கீர்த்தி சுரேஷை கேட்டுள்ளனர்

இவை தவிர வெப் தொடரில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

First published:

Tags: Actress Keerthi Suresh