க்யூட்டாக பாடும் கீர்த்தி சுரேஷ் - ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

க்யூட்டாக பாடும் கீர்த்தி சுரேஷ் - ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

கீர்த்தி சுரேஷ்

முன்னதாக தனது ஓவியங்கள் மூலம் தனது திறன்களை வெளிப்படுத்தினார்.

 • Share this:
  தென்னிந்திய சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க இளம் சாதனையாளர்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம், பவன் கல்யாண், சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். புகழ்பெற்ற நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, 'மகாநதி / நடிகையர் திலகம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

  கீர்த்தி ஒரு பன்முக திறமை வாய்ந்தவர். முன்னதாக தனது ஓவியங்கள் மூலம் தனது திறன்களை வெளிப்படுத்தினார். விஜய் பிறந்தநாளன்று வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்தார். இப்போது புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவில் 'ரங் தே' படத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இசைக்கு ஏற்ப கீர்த்தி பாடுகிறார்.  கீர்த்தியின் இனிமையான குரலைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்த வீடியோ அதிக லைக்குகளைப் பெற்று வருகிறது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்தே' மற்றும் செல்வராகவனுடன் 'சாணி காயிதம்' ஆகியப் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: