Home /News /entertainment /

கீர்த்தி சுரேஷா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

கீர்த்தி சுரேஷா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் என்று கூறி, ஒரு படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் 2015 ஆம் ஆண்டு, இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்தில் பாராட்டுகளை பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்து நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.  தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்யுடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் நடித்தார்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை தழுவிய நடிகையர் திலகம்  படத்தில் நடித்தார்.  இதன் தெலுங்கு பதிப்பான ‘மகாநதி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார்.

அதன்பின் இவரின் நடிப்பில் வெளியான பெண்குயின். மிஸ் இந்தியா ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என சில விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் என்று ஒரு படத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 




அதில் நம்ம கீர்த்தி சுரேஷா இது,என்ன சிம்ரன் இதெல்லாம் என்ற வாசகத்தை பயன்படுத்தி மீம் கிரியேட்டர்ஸ்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.



சினிமா செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actress Keerthi Suresh, Cinema, Keerthy suresh, Tamil Cinema

அடுத்த செய்தி