கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்ற ஐபிஎஸ் மோகிதா சர்மா - அசத்தல் ட்வீட்!

இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கூறி உள்ளனர். சிலர் மேகி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். 

கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்ற ஐபிஎஸ் மோகிதா சர்மா - அசத்தல் ட்வீட்!
ஐ.பி.எஸ் அதிகாரி மோகிதா சர்மா
  • News18
  • Last Updated: November 21, 2020, 8:39 AM IST
  • Share this:
ஐபிஎஸ் அதிகாரி மோகிதா சர்மா நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற கேபிசி நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி மோஹித் சர்மா பிரபலமான கேபிசி சீசன் 12ன் இரண்டாவது கோடீஸ்வரராகியுள்ளார். மோகிதா சர்மா ஒரு ஐ.பி.எஸ் மற்றும் அவரது கணவர் ருஷால் கார்க் ஒரு இந்திய வன சேவை அதிகாரி ஆவார். இருவரும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மோகிதா சர்மா இதுகுறித்து பேசுகையில், தனது கணவர் கேபிசிக்கு செல்ல விரும்புவதாகவும், கடந்த இருபது ஆண்டுகளாக அதற்காக முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார்.

என் கணவரின் கனவு கேபிசி-யில் சென்று விளையாடுவதுதான். அவர் 20 ஆண்டுகளாக இதற்காக முயற்சித்து வரும் நிலையில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் பங்கேற்றேன் என்று கூறினார். அதில் பங்கேற்றது மட்டுமின்றி வெற்றியும் பெற்றுள்ளார். 

Also read... கலர்ஸ் கிச்சனில் இந்த வாரம் செஃப் தாமு உடன் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா?இந்த வெற்றிக்கு பின்னர்  ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தை சிவில் சர்வீசஸ் அதிகாரியான மோகிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவருக்கு மேகி, இரண்டு டேஸ்ட்மேக்கர் சாச்செட்டுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ட்விட்டரில் # KBC12, 1 # மேகி பாக்கெட், 2 மசாலா சாச்செட்டுகள் கிடைத்தன. இவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கடவுள் இன்று இரக்கமுள்ளவர் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கூறி உள்ளனர். சிலர் மேகி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். 
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading