காதல்... திருமணம்... கயல் ஆனந்தியின் பதிவு..!

காதல்... திருமணம்... கயல் ஆனந்தியின் பதிவு..!

கயல் ஆனந்தி

ஒவ்வொரு கஷ்டத்தையும் ஒன்றாக சந்தித்த பிறகு, ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இந்த உலகை வெல்ல முடியும் என்று உணர்ந்தோம்.

 • Share this:
  தனது திருமணம் பற்றி முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் நடிகை கயல் ஆனந்தி.

  இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் அறிமுகமான நடிகை கயல் ஆனந்தி சமீபத்தில் இயக்குநர் சாக்ரடீஸை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில் ஆனந்தி முதன் முறையாக தனது நீண்டகால காதலைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
  "நீங்கள் விரும்பும் ஒருவருடன் உங்கள் வாழ்நாள் முழுவதையும் கழிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்ததும், உங்கள் வாழ்க்கையை சீக்கிரம் தொடங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்துக் கொண்ட பிறகு, ஒவ்வொரு கஷ்டத்தையும் ஒன்றாக சந்தித்த பிறகு, ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இந்த உலகை வெல்ல முடியும் என்று உணர்ந்தோம்.

   

  மேலும் படிக்க... எளிமையான முறையில் திருமணம்.. இணை இயக்குநரை மணந்தார் நடிகை கயல் ஆனந்தி!

   

  திரு. சாக்ரடீஸுடன் ஜனவரி 7-ஆம் தேதி எனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் முன்னிலையில் ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்துக் கொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: