Kavalthurai Ungal Nanban Review | காவல்துறை மீதுள்ள கோபத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறதா? காவல்துறை உங்கள் நண்பன் படம் எப்படி இருக்கு?

Kavalthurai Ungal Nanban Review | காவல்துறை மீதுள்ள கோபத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறதா? காவல்துறை உங்கள் நண்பன் படம் எப்படி இருக்கு?

காவல்துறை உங்கள் நண்பன் பட ஸ்டில்

காவல்துறை உங்கள் நண்பன் என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

  • Share this:
சிங்கம், சாமி, தர்பார் என காவல்துறை அதிகாரிகளை சூப்பர் ஹீரோக்களாக சித்தரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது காவல்துறை நிகழ்த்தும் அத்துமீறல்களை வெளிப்படுத்தும் 'விசாரணை' போன்று திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ள திரைப்படமாக உருவாகியுள்ளது ‘காவல்துறை உங்கள் நண்பன்’.

ஆர்.டி.எம் (RDM) என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அவசரகதியில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் சாமானியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் துவங்கி, பாஸ்போட் வெரிஃபிகேஷனுக்காக காவல் துறையை நாடும் பொழுது சந்திக்கும் பிரச்னைகள் வரை அனைத்தையும் படக்குழுவினர் சொல்ல முயற்சி செய்துள்ளனர்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்து நாயகனாக உருவெடுத்திருக்கும் சுரேஷ் காவல்துறை சித்திரவதை செய்யும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காவல்துறை அதிகாரியாக மைம் கோபியும் மிரட்டி எடுத்துள்ள இந்த திரைப்படம், சில இடங்களில் காவல்துறை செய்யும் அத்துமீறல்களை சுட்டிக்காட்டி இருந்தாலும், காவல்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல இடங்களிலும் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் வழக்கமான தமிழ் சினிமாவாக இல்லாமல் வித்தியாசமான ஒரு திரைப்படமாக இந்த படம் கவனம் ஈர்த்துள்ளது. சாத்தான்குளம் விவகாரத்திற்கு பின்னர் வெளியாகும் திரைப்படம் என்பதால் காவல்துறை மீதுள்ள கோபத்தை பொதுமக்களுக்கு மேலும் இந்த திரைப்படம் அதிகரிக்கச் செய்து உள்ளதோடு படத்தின் இறுதிக்காட்சிகளில் காவல்துறைக்கு எதிரான வன்முறை காட்சிகள் சமுதாயத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: