குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் வென்ற எலக்ட்ரீஷியன்: இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்!
ஹாட் சீட்டில் அமர்ந்தபடி அனுஜ் கூறியதாவது, "என் அம்மா தனது வாழ்க்கையில் ரூ .2 லட்சத்துக்கு மேல் பார்த்ததில்லை" என்று கூறியது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

- News18
- Last Updated: January 14, 2021, 6:21 AM IST
பாலிவுட் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) நடத்தி வரும் கவுன் பனேகா குரோர்பதி-12 (Kaun Banega Crorepati 12) எனும் வினாடி - வினா நிகழ்ச்சி உண்மையில் நம்பிக்கையைத் தூண்டும் போட்டியாளர்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த அப்சீன் நாஸ் (Afseen Naaz) என்பவர் சமீபத்தில் இந்த போட்டியில் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் வென்றார். அதன் பிறகு, எலக்ட்ரீஷினாக பணிபுரியும் மற்றொரு போட்டியாளர் அதே நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.25 லட்சம் வென்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இது தொடர்பான ப்ரோமோ சோனி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. எலக்ட்ரீஷியனாக வேலை செய்யும் அனுஜ்குமார் (Anuj Kumar) ஒரு நாளைக்கு ரூ.776 ஊதியம் மட்டுமே பெற்று வருகிறார். மேலும் இவரது வரவிருக்கும் எபிசோடில் ரூ.50 லட்சத்திற்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது விளையாட்டு திறமையை கண்டு அமிதாப் பச்சன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அனுஜ் தற்போது இருக்கும் இடத்தை அடைய வாழ்க்கையில் கடுமையாக உழைத்ததற்காக பாராட்டினார். மேலும், தனது தாயார் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்துள்ளார் என்றும், அவருக்கான தகுதியான வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியவில்லை என்றும் அனுஜ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். Also read... நடிகர் சிம்புவிற்கு இனிமேல் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு!
ஹாட் சீட்டில் அமர்ந்தபடி அனுஜ் கூறியதாவது, "என் அம்மா தனது வாழ்க்கையில் ரூ .2 லட்சத்துக்கு மேல் பார்த்ததில்லை" என்று கூறியது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. மறுபுறம், கடந்த ஜன.12 (செவ்வாய்க்கிழமை) இரவு எபிசோடில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியரான அப்சீன் என்பவர் ரூ .25 லட்சம் வென்றார். தனது தந்தை முன்பு ஒரு சைக்கிள் பழுதுபார்க்கும் வேலையை செய்து வந்ததாகவும், இப்போது ஒரு கெமிக்கல் கடையில் வேலை செய்கிறார் என்றும் பகிர்ந்து கொண்டார்.
அவரது ஏழ்மையான பின்னணி காரணமாக, தான் விரும்பிய மருத்துவக் கல்வியை அவரால் தொடர முடியவில்லை. ஏனெனில் அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதனால் அவர் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஈத் தினத்தன்று மட்டுமே புதிய ஆடைகளை அணிந்ததால் அவரது உறவினர்களால் கேலி செய்யப்பட்டதாகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். கஷ்டங்களை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் இப்படியொரு மிக உயர்ந்த நிலைக்கு வந்ததற்காக அப்சீனைப் அமிதாப் பச்சன் புகழ்ந்து பேசினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த அப்சீன் நாஸ் (Afseen Naaz) என்பவர் சமீபத்தில் இந்த போட்டியில் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் வென்றார். அதன் பிறகு, எலக்ட்ரீஷினாக பணிபுரியும் மற்றொரு போட்டியாளர் அதே நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.25 லட்சம் வென்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இது தொடர்பான ப்ரோமோ சோனி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. எலக்ட்ரீஷியனாக வேலை செய்யும் அனுஜ்குமார் (Anuj Kumar) ஒரு நாளைக்கு ரூ.776 ஊதியம் மட்டுமே பெற்று வருகிறார். மேலும் இவரது வரவிருக்கும் எபிசோடில் ரூ.50 லட்சத்திற்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது விளையாட்டு திறமையை கண்டு அமிதாப் பச்சன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அனுஜ் தற்போது இருக்கும் இடத்தை அடைய வாழ்க்கையில் கடுமையாக உழைத்ததற்காக பாராட்டினார். மேலும், தனது தாயார் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்துள்ளார் என்றும், அவருக்கான தகுதியான வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியவில்லை என்றும் அனுஜ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.