கொரோனா இரண்டாம் அலை : காட்டேரி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

கொரோனா இரண்டாம் அலை : காட்டேரி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

காட்டேரி பட போஸ்டர்

கொரோவை காரணம் காட்டி காட்டேரி திரைப்படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்துள்ளது.

  • Share this:
கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய வகை பரவல், உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இது இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவுகிறது. புதிய ரக கொரோனாவால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என தெரிவித்திருக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘காட்டேரி’ திரைப்படம் தற்போது இருக்கும் கொரோனா அச்சுறுத்தலால் மக்களின் நலன் கருதி காட்டேரி வெளியீட்டை தள்ளி வைப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

இதற்கு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். படத்தை வெளியிடுவதும் வெளியிடாதது அவர்களது விருப்பம். ஆனால் சொந்த காரணத்திற்காக தள்ளி வைக்கும் படத்தை கொரோனா என்று காரணம் சொல்வது மக்களை பீதிக்கு உள்ளாக்கும்செயல் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.கொரோனா இரண்டாம் அலை என்ற ஒன்று தமிழகத்தில் இல்லை என்று அரசு தொடர்ந்து சொல்லி வரும் நிலையில் மக்களை பயமுறுத்தும் விதமாக ‘காட்டேரி’ படக்குழு நடந்து கொள்வதாக திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது தான் மக்கள் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கி இருக்கும் சூழலில் இதுபோன்ற செயல்கள் அவர்களை மீண்டும் பயத்திற்கு உள்ளாக்கும் என்றும் அவர் கூறினார்.

வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘காட்டேரி’ திரைப்படத்தை டிகே இயக்கியுள்ளார். காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்...
Published by:Sheik Hanifah
First published: