Home /News /entertainment /

நடிகர் அக்‌ஷய் குமாரின் காலை தொட்டு வணங்கிய நடிகை கத்ரினா கைஃப்.. பாலிவுட் ருசிகரம்

நடிகர் அக்‌ஷய் குமாரின் காலை தொட்டு வணங்கிய நடிகை கத்ரினா கைஃப்.. பாலிவுட் ருசிகரம்

Katrina kaif - akshay kumar

Katrina kaif - akshay kumar

அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை, என கூறியவாறு உடனே அக்‌ஷய் குமாரின் காலை தொட்டு வணங்கினார் கத்ரினா.

நடிகை கத்ரினா கைஃப், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் காலை தொட்டு வணங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தி கபில் சர்மா என்ற பிரபலமான நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார் மற்றும் கத்ரினா கைஃப் ஆகிய இருவரும், அவர்களின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று தியேட்டர்களில் ரிலீசான சூர்யவன்ஷி திரைப்படத்தின் ப்ரொமஷனுக்காக கெஸ்ட் ஆக வருகை தந்தனர். கொரோனா பரவலுக்காக இரண்டாவது முறையாக ஊரடங்கு போடப்பட்ட பின்னர் தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் சூர்யவன்ஷி திரைப்படம் தான் முதல் படமாக வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோவை சோனி நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த புரோமோவில், நிகச்சிக்கு வருகை தந்த நடிகை கத்ரினா கைஃப் நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் சர்மா, அர்ச்சனா புரான் சிங் ஆகியோருக்கு வாழ்த்து கூறினார். ஆனால் எல்லாரும் வாழ்த்து கூறிய கத்ரினா தனக்கு வாழ்த்து கூறவில்லை பார்த்தீர்களா என அக்‌ஷய் குமார் செல்லமாக கோபித்துக் கொண்டார்.

Also read:   பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு அதிக முக்கியத்துவம் ஏன் – பின்னணி

அக்‌ஷய் குமார் இப்படி கூறியவுடன் அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை, என கூறியவாறு உடனே அக்‌ஷய் குமாரின் காலை தொட்டு வணங்கினார் கத்ரினா. இதையடுத்து பார்த்தீர்களா கத்ரினா கைஃப் சீனியர்களுக்கு எப்படி எல்லாம் மரியாதை தருகிறார் என கூறினார்.

பாலிவுட் நடிகர்களின் இந்த எதார்த்தமான பேச்சை ரசிகர்கள் ரசித்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சூர்யவன்ஷி படத்தில் நடித்த அனுபவம் குறித்து இருவரும் பகிர்ந்தனர்.

Also read:    மத்திய சிறைக்குள் வெடித்த கலவரம்.. அதிகாரிகளை சிறைக்குள் சிறை வைத்த கைதிகள்.

அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகியோரும் சூர்யவன்ஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து ஜாக்கி ஷராஃப், குல்ஷன் குரோவர், ஜாவேத் ஜாஃரி, அபிமன்யு சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தை, ரிலையன்ஸ் எண்டர்யெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த வெள்ளியன்று தியேட்டர்களில் ரிலீசான சூர்யவன்ஷி முதல் நாளில் 26.29 கோடி ரூபாயும், நேற்று 23.85 கோடி ரூபாயும் கலெக்‌ஷன் செய்துள்ளது. இதன் மூலம் இரண்டே நாட்களில் இப்படத்தின் வசூல் 50 கோடியை கடந்திருக்கிறது.
Published by:Arun
First published:

Tags: Akshay Kumar, Bollywood, Entertainment, Katrina Kaif

அடுத்த செய்தி