Home /News /entertainment /

Kasthuri Shankar : தாலிய விட தங்கம் முக்கியமா? - நடிகை கஸ்தூரி கோபம்!

Kasthuri Shankar : தாலிய விட தங்கம் முக்கியமா? - நடிகை கஸ்தூரி கோபம்!

கஸ்தூரி

கஸ்தூரி

முண்டியடிச்சி துணி நகை வாங்கலையின்னாதான் என்னவாம்? தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனாவால் மிக மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது. இதனை சமாளிக்க முடியாமல் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (24/05/2021) முதல் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அப்பொழுது மருந்து கடைகள் உள்ளிட்ட சில கடைகளைத் தவிர்த்து பிற கடைகள் திறந்து இருக்காது. இதனை முன்னிட்டு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

அந்த இரு நாட்களும் அனைத்து விதமான கடைகளும் இயங்கும். பேருந்துகள் இயங்கும். அந்த இரு நாட்களும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் ஊரடங்கின் போது வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்கப்படும், பால், நாளிதழ்கள் வழக்கம் போல் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

சென்னையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பெருந்திரளாக வந்தனர். சமூக இடைவெளி துளியும் இன்றி பேருந்துகளில் முண்டியடித்து ஏறினர். மேலும் கடைகளில் அதிக அளவு கூட்டம் கூடினர்.

ALSO READ | ‘கடைசியா ஒருதடவை முகத்தை கூட பார்க்க முடியல..’கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை மாற்றிகொடுத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி

கொரோனா தீவிரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது பல சமூக செயற்பாட்டாளர்களுக்கு வருத்தத்தை அளித்தது.பலரும் தங்கள் வருத்தத்தை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

 

  

 

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், முண்டியடிச்சி துணி நகை வாங்கலையின்னாதான் என்னவாம்? தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? சேப்டிய விட சேலை முக்கியமா? கல்யாணம்/சடங்கு மாதிரி தவிர்க்க முடியாத Purchaseக்கு Whatsapp, phone, online எல்லா Option-ம் இருக்கு. கடைக்கு போயி கொரோனாவை எதுக்கு வாங்கணும்? COVIDIOTS என்று கடுமையாக சாடியுள்ளார்.

ALSO READ | பசியின் கேள்விக்கு பதிலாக மாறிய "திருநகர் பக்கம்"எளியோரின் வயிறு நிறைக்கும் மதுரையின் மனிதநேயர்கள்

கஸ்தூரி மட்டுமல்லாமல் மனோபாலா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். 90களில் தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் நடிகை கஸ்தூரி. தற்போது தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான அக்னி நட்சத்திரம், தெலுங்கில் இன்டின்டி குருஹலக்ஷ்மி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

 

  

பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட அவர் அந்த நிகழ்ச்சியில் மிகுந்த பிரபலமடைந்தார். தொடர்ந்து சமூக நிகழ்வுகள், அரசியல் உள்ளிட்டவை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான ட்வீட்டுகள் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒரு சில சர்ச்சையையும் ஏற்படுத்தின. மேலும் அவர் டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Actor Kasthuri, Social media

அடுத்த செய்தி