கொரோனா விதிமீறல் காரணமாக காசி திரையரங்கிற்கு ரூ.5,000 அபராதம் - மாஸ்டர் ரீலீஸ் செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை!
சென்னையில் ரசிகர் கொண்டாட்டங்களுக்கு புகழ்பெற்ற காசி திரையரங்கில் விஜயின் மாஸ்டர் படம் இன்று திரையிடப்பட்டது.

- News18 Tamil
- Last Updated: January 13, 2021, 3:26 PM IST
கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக காசி திரையரங்கம் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதுடன் 5,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் இன்று ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த அனுமதியை ரத்து செய்த தமிழக அரசு, 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற முந்தைய அறிவிப்பே தொடரும் என அறிவித்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. 
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாஸ்டர் திரைப்படம் இன்று அதிகாலை ரிலீஸ் ஆனதுடன், முன்பதிவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சென்னையில் ரசிகர் கொண்டாட்டங்களுக்கு புகழ்பெற்ற காசி திரையரங்கிலும் விஜயின் மாஸ்டர் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி ,அளிக்கப்பட்டு இருந்த நிலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக காசி திரையரங்கம் மீது தி.நகர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதுடன் 5,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்