Home /News /entertainment /

சர்ச்சைப் பேச்சு: கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சர்ச்சைப் பேச்சு: கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நடிகர் - சட்டமன்ற உறுப்பினர் - கருணாஸ்

நடிகர் - சட்டமன்ற உறுப்பினர் - கருணாஸ்

  • News18
  • Last Updated :
    காவல்துறையை விமர்சித்து பேசிய நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ``சாமி, சிங்கம் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதே போல் சில காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அட்வைஸ் கொடுக்க வேண்டும். நான் சட்டமன்றத்திலேயே பேசியவன். உங்களுக்கு போதை ஏற்றினால் தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம் என்று பேசினார்.

    மேலும் தமிழக முதல்வரை மேடையில் விமர்சித்த அவர் குறிப்பிட்ட சமுதாயம் குறித்தும் சில விஷயங்களை பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு காவல்துறை வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக காவல்துறை கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    முன்னதாக கருணாஸின் பேச்சு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றிருப்பதாகவும், சட்டத்தை மீறி யார் பேசினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor, Karunas, MLA, Police file case

    அடுத்த செய்தி