முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கருணாநிதி சிலை திறப்பு: நடிகர் வடிவேலு பங்கேற்பு

கருணாநிதி சிலை திறப்பு: நடிகர் வடிவேலு பங்கேற்பு

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு

மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்

  • Last Updated :

மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுகவின் தலைவராக இருந்தபோது கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இவருக்கு பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு உருவச்சிலை ஒன்று நிறுவ மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முடிவெடுத்தது. அதன்படி சிலைதிறப்பு நிகழ்ச்சி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு , புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

கருணாநிதி சிலை திறப்பில் பங்கேற்கப்போவதில்லை - கமல்ஹாசன் - வீடியோ

First published:

Tags: Actor Vadivelu