மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக ஹன்சிகா செய்த காரியம்

news18
Updated: August 12, 2018, 2:17 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக ஹன்சிகா செய்த காரியம்
ஹன்சிகா
news18
Updated: August 12, 2018, 2:17 PM IST
கருணாநிதியின் மறைவு காரணமாக நடிகை ஹன்சிகா தனது புதிய படத்தின் அறிவிப்பை ஒத்தி வைத்துள்ளார்.

2003-ம் ஆண்டில் இந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, 2007-ம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகா தனது 50-வது படத்தை எட்டியுள்ளார்.

ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50வது படத்தின் டைட்டில் மற்றும் படக்குழு குறித்த விவரங்களை நடிகர் தனுஷ் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதியின் மறைவு காரணமாக அதைத் தள்ளி வைத்துள்ளதாக ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ட்விட்டர் பதிவில், “கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக மற்றொரு நாள் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த ஹன்சிகா, “கலைஞர் டாக்டர் கருணாநிதியின் மறைவு மிகவும் துயரமளிக்கிறது. நாட்டிலேயே சிறந்த தலைவர்களில் ஒருவர். அவரது மாபெரும் இழப்பால் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும் தமிழர்களுக்கும் இறைவன் தைரியமளிப்பார் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...