நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா... ரஜினியின் முடிவுக்கு கார்த்திக் சுப்புராஜ் ரியாக்‌ஷன்

நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா... ரஜினியின் முடிவுக்கு கார்த்திக் சுப்புராஜ் ரியாக்‌ஷன்

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ்

நடிகர் ரஜினி உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு இனி வரமுடியாது என கூறியதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நீங்கள் எங்களுக்கு முக்கியம் என ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  2017-ம் ஆண்டு இறுதியில் அரசியலுக்கு வருவது உறுதி, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டி என்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது நாட்டில் நிலவும் ஒரு சில பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார்.

  இதையடுத்து தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிசம்பர் 3-ம் தேதி ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்தார். 

  டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று உறுதியளித்திருந்த ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க டிசம்பர் 13-ம் தேதி ஹைதராபாத் சென்றார். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுத்து மிகவும் எச்சரிக்கையுடன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சைப் பெற்றார்.

  இந்தநிலையில், நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

   

   


  ரஜினிகாந்தின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார், அதில்,  “தலைவா வருத்தப்படாதீர்கள்.உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் தான் எங்களுக்கு முக்கியம்.என்றும் எங்களின் அன்பு உங்களுக்காக இருக்கும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: