கார்த்திக் டயல் செய்த எண்... போனில் ஜெஸ்ஸி - கௌதம் மேனனின் குறும்பட டீசர்!

Youtube Video

ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த குறும்படம் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் டீசரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

  இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த திரையுலக பிரபலங்கள் பல விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.

  இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி அதன் டீசரை வெளியிட்டுள்ளார் கௌதம் மேனன். இக்குறும்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். ‘ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த குறும்படம் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் த்ரிஷா பேசும் வசனங்கள் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை ஞாபகப்படுத்துகிறது.

  முன்னதாக சூப்பர் ஹிட்டான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குநர் கௌதம் மேனன் பல பேட்டிகளில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Sheik Hanifah
  First published: