‘சிகப்பு ரோஜாக்கள்’படத்தை ரீமேக் செய்ய விரும்பும் பிரபல இளம் இயக்குனர்

சிகப்பு ரோஜாக்கள்

கமலின் சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  தமிழ் சினிமாவில் நான்கு தலைமுறை நடிகர்கள் என்றால் அது ரஜினி,கமல் தான்.தற்போது உருவாகி கொண்டிருக்கும் இளம் இயக்குனர்கள் ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் வேலை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.அந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

  இந்நிலையில் தனுஷின் டி43 படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன் கமலின் பழைய திரைப்படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.கார்த்திக் நரேன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறி வந்தார்.அப்போது ரசிகர் ஒருவர்
  ‘ஒரு படத்தை ரீமேக் செய்ய விரும்பினால் எந்த படத்தை ரீமேக் செய்வீர்கள்’ என கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு கமலின் சிகப்பு ரோஜாக்கள் என கார்த்திக் நரேன் பதில் கூறியிருந்தார்.  அதே போல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தை பார்த்து தான் தனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் டி43 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கியது.இந்த படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளனர்.மேலும் டி 43 படத்தின் பெயர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: