கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நரகாசூரன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நரகாசூரன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  முதல் படம் துருவங்கள் பதினாறு படத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ரசிகர்களாக பெற்றார் அதன் இயக்குனர் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறின் மேக்கிங்கை மணிரத்னம், கௌதம் வாசுதேவ மேனன் போன்றவர்கள் பாராட்டினர். கௌதம் கார்த்திக் நரேனின் இரண்டாவது படத்தை தயாரிக்க முன் வந்தார். அதுதான் நரகாசூரன். அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா நடித்தனர். 

  ஏற்கனவே பல கோடிகள் கடனில் இருந்த கௌதமால் நரகாசூரன் படத்தை வெளியிட முடியவில்லை. கார்த்திக் நரேன், கௌதம் இடையே வார்த்தைப் போர் நடக்குமளவு நிலைமை மோசமானது. பிறகு படத்தயாரிப்பிலிருந்து கௌதம் விலகினார். அப்படியும் பிரச்சனை தூவானமாக தொடர்ந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சர்வரோக நிவாரணியாக வந்திருக்கும் ஓடிடி பிரச்சனையை முடித்து வைத்துள்ளது.

  Also Read: மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்..

  ஆம், சோனிலிவ் ஓடிடி தளத்தில் நரகாசூரன் ஆகஸ்ட் 13 நேரடியாக வெளியாகிறது. இவர்கள்தான் தேன், வாழ் படங்களை வெளியிட்டனர். இப்போது நரகாசூரன். அடுத்து மணிகண்டனின் கடைசி விவசாயி படத்தை வெளியிட உள்ளனர்

  கார்த்திக் நரேன் நரகாசூரனுக்குப் பிறகு மாஃபியா என்ற படத்தை முடித்து வெளியிட்டார். அதையடுத்து தனுஷை வைத்து அவர் இயக்கிவரும் படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: