சுல்தான் திரைப்படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகிறதா?

சுல்தான் திரைப்படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகிறதா?

கார்த்தி-ராஷ்மிகா மந்தனா

சுல்தான் திரைப்படத்தை ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியிட பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

  • Share this:
    நடிகர் கார்த்தி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அந்த ஆண்டின் ஃபிலிம் ஃபேர் விருதில் சிறந்த நடிக்கருக்கான விருதை பெற்றார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், தோழா ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். கடந்த ஆண்டு வெளியான தம்பி திரைப்படத்தில் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து நடிந்திருந்தார்.

    இதையடுத்து ரெமோ திரைப்படத்தின் இயக்குனரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘சுல்தான்’ தி்ரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ராஷ்மிகாவை 'national crush of india'என கூகுள் குறிப்பிட்ட செய்தி சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் சுல்தான் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 14.50 கோடி ரூபாய்க்கு இந்தத் திரைப்படம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்து
    படக்குழுவினரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Tamilmalar Natarajan
    First published: