குலு மணாலியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகர் கார்த்தி!

குலு மணாலியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகர் கார்த்தி!
கார்த்தி
  • News18
  • Last Updated: September 24, 2018, 7:30 PM IST
  • Share this:
குலு மணாலியில் ஏற்பட்ட கன மழை, வெள்ளம் காரணமாக நடிகர் கார்த்தி நடிக்கும் `தேவ்' படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் படக்குழுவினர் சிக்கித் தவித்ததோடு மட்டுமின்றி பெரும் நஷ்டத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், ``தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார் , பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது.

இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. இதனால் ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்குச் சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவர்கள், சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.


23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பாதைகளைச் சரி செய்ய கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும், அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது’’ என்றார் நடிகர் கார்த்தி.

இந்த பாதிப்பால் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு 1.5 கோடிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது `தேவ்’. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், வம்சி, நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
First published: September 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading