• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உலகின் சிறந்த 25 படங்கள் பட்டியலில் கர்ணன், மண்டேலா...!

உலகின் சிறந்த 25 படங்கள் பட்டியலில் கர்ணன், மண்டேலா...!

மண்டேலா மற்றும் கர்ணன்

மண்டேலா மற்றும் கர்ணன்

உலகளாவிய பட்டியலான இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மூன்று திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவந்தவை. இரண்டு தமிழில் வெளிவந்தவை. 

  • News18
  • Last Updated :
  • Share this:
2021 ஜுன் 30 வரையான அரையாண்டில் உலகில் வெளியான சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலை Letterboxd இணையதளம் வெளியிட்டுள்ளது. திரையரங்கில் அல்லது ஓடிடியில் அல்லது வீடியோ ஆன் டிமாண்ட் இதில் ஏதாவது ஒன்றில் படம் வெளியாகியிருக்க வேண்டும், என்பது ஒன்றே நிபந்தனை. 

உலகளாவிய பட்டியலான இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மூன்று திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவந்தவை. இரண்டு தமிழில் வெளிவந்தவை

Letterboxd வெளியிட்டுள்ள பட்டியலில் 5-வது இடத்தில் தி கிரேட் இன்டியன் கிச்சன் இடம்பெற்றுள்ளது. ஜியோ பேபி இயக்கிய இந்தப் படத்தில் சுராஜ் வென்ஜாரமூடும், நிமிஷா சஜயனும் நடித்திருந்தனர். இந்தியாவில் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கை சமையல்கட்டோடு முடிவடைவதை இந்தப் படம் கலாப்பூர்வமாக காட்டியிருந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பத்தாவது இடத்தில் கர்ணன் படம் உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய இத்திரைப்படம் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் வலியையும், அவர்கள் திருப்பி அடிப்பதையும் சொல்லியது. திரையரங்கில் வசூலை அள்ளிய இத்திரைப்படம் ஓடிடியிலும் அதிக பார்வையாளர்களை பெற்றது.

இந்தப் பட்டியலில் 12 வது இடத்தில் தில்லீஷ் போத்தனின் ஜோஜி இடம்பிடித்துள்ளது. அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத தந்தை, அவரது அதிகாரத்திலிருந்து எப்படியாவது விடுதலை பெற துடிக்கும் மகன் என்ற கதைக்குள் ஒரு காவியத்தை பகத் பாசிலுடன் இணைந்து படைத்திருந்தார் தில்லீஷ் போத்தன். உலகளாவிய பட்டியலில் இந்தப் படம் இடம்பிடித்ததில் ஆச்சரியமில்லை

Also read... Mint Tower: படம் சொல்லும் கதை - சார்பட்டா பரம்பரையின் மின்ட் டவர்!

Kana Kaanum Kaalangal: 15 வருடம் கழித்து ஒன்று கூடிய ’கனா காணும் காலங்கள்’ நடிகர்கள்!

மண்டேலா திரைப்படம் இந்தப் பட்டியலில் 17 வது இடத்தில் உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த இந்தப் படம் ஒரு சாமானியனின் வாக்குக்குக்கு இருக்கும் வலிமையை அரசியல் நையாண்டியுடன் சொன்னது. அரசியல் சட்டையர் என்றவகையில் பலரது பாராட்டை பெற்ற படம்.

மலையாளத்தின் நாயாட்டு திரைப்படம் 23 வது இடத்தில் உள்ளது. மார்டின் ப்ரக்கட் இயக்கிய இந்தப் படம் தேர்தல் அரசியலில் ஒரு சாதாரணப் பிரச்சனை எப்படி மூவரது வாழ்க்கையை ஓடவிடுகிறது என்பதை காட்டியது. அழுத்தமான கதை, சிறப்பான நடிப்பு, தொய்வில்லாத திரைக்கதை என நாயாட்டு வெளியான போதே பாராட்டைப் பெற்றது.

சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட சிறந்த 25 படங்களின் பட்டியலில் 5 இந்தியத் திரைப்படங்கள் இடம்பெறுவது மகிழ்ச்சி. அதில் இரண்டு தமிழ்ப் படங்கள் என்பது பெருமை கொள்ள வேண்டிய தருணம்



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: