மசாலா சினிமாவின் வித்தகர் என்று அட்லீயை புகழ்ந்திருக்கும் கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும் வியந்து பாராட்டியுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன் தாரா, டேனியல் பாலாஜி, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் சறுக்கினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.
பிகில் வெளியாவதற்கு முன்பாக அதேமாதத்தில் வெளியான அசுரன் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தனுஷ் நடித்த படங்களிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்கள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாலிவுட் பிரபலமான கரண் ஜோஹர், “வெற்றிமாறனின் அசுரன் படத்தைப் பார்த்தேன். கடவுளே... அது மொத்தமாக என் மனதை புரட்டிப் போட்டது. தனுஷ் ஆச்சர்யமளிக்கிறார். பிரம்மிக்கவைக்கிறார். இருக்கையின் நுனியில் இருந்து படத்தைப் பார்த்தேன்.
அட்லீ இயக்கிய பிகில் படத்தை நான் மிகவும் விரும்பினேன். அது மிகப் பெரிய வெற்றிப் படம். நான் அவருடைய எல்லாப் படங்களையும் பார்த்துள்ளேன். அதனை ரசிக்கிறேன். அவர், மசாலா சினிமாவில் வித்தகர்” என்று கூறியுள்ளார்.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அட்லீ, கரண் ஜோஹருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க: 12 முறை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் யோகிபாபு?
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asuran, Atlee, Bigil, Director vetrimaran