பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட சினேகன் பல பாடல்களை எழுதியுள்ளார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் மிகவும் பிரபலமானார்.அதையடுத்து கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்தார்.தற்போது இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார் சினேகன்.
சமீபத்தில் சினேகன் கன்னிகாவிற்கு கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது.அந்த திருமணத்தில் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்பு திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இந்நிலையில் நடிகை கன்னிகா ரவி திருமணத்திற்கு பின்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் 7 வருடத்திற்கு முன்பு எடுத்தக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில்’ என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது.எங்களுடைய முதல் புகைப்படம் 2014 ஆம் ஆண்டு எடுத்தது.வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
— கன்னிகா ரவி @Kannika Ravi (@KannikaRavi) July 31, 2021
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.