• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உதய நிதி ஸ்டாலின் பட ட்ரெய்லரை வெளியிடும் ’பேட்ட' பிரபலம்

உதய நிதி ஸ்டாலின் பட ட்ரெய்லரை வெளியிடும் ’பேட்ட' பிரபலம்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஒரு விவசாயிக்கும் வங்கி அதிகாரிக்கும் இடையிலான ஒரு மெல்லிய காதல்தான் இந்தப் படத்தின் ஒருவரி கதை. படத்தின் கிளைமாக்ஸில் கிளிசரின் உதவியின்றி அழுது நடித்துள்ளேன் - உதயநிதி ஸ்டாலின்

  • News18
  • Last Updated :
  • Share this:
கண்ணே கலைமானே படத்தின் ட்ரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தர்மதுரை படத்தை அடுத்து இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் கண்ணே கலைமானே. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான ‘எந்தன் கண்களை காணோம்’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுவார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின். “கண்ணே கலைமானே படம் விவசாயிகளின் பிரச்னைகள், நீட் தேர்வு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கிய கதை. இந்தப் படத்தில் நான் கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்கானிக் விவசாயியாக நடித்துள்ளேன். தமன்னா, பாரதி என்ற கதாபாத்திரத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரியாக நடித்துள்ளார்.

ஒரு விவசாயிக்கும் வங்கி அதிகாரிக்கும் இடையிலான ஒரு மெல்லிய காதல்தான் இந்தப் படத்தின் ஒருவரி கதை. படத்தின் கிளைமாக்ஸில் கிளிசரின் உதவியின்றி அழுது நடித்துள்ளேன். அதற்கு இயக்குநர் சீனு ராமசாமிதான் காரணம்”என்று கூறியிருந்தார்.

ஜுஸ் கடை போட்டு ATM கார்டு தகவல்களைத் திருடிய வடமாநில கும்பல் - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: