"ஹீரோ தொந்தரவு செய்கிறார்" - 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகை ஓபன் டாக்!

நடிகை நிமிஷிகா

கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கும் ஹீரோ எப்போதும் தன்னை தொந்தரவு செய்து கொண்டிருப்பதாக, நடிகை நிமிஷிகா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சன் டீவியில் கண்ணான கண்ணே சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோயினாக நடித்து வரும் நிமிஷிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் இருக்கின்றனர். சீரியலில் ஹோம்லி கேர்ளாக நடிக்கும் அவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியில் கலக்குகிறார். லாக்டவுனில் வீட்டில் இருக்கும் நிமிஷிகா, கவர்ச்சியான புகைப்படம் மற்றும் சேலையில் வீடியோ என பதிவேற்றி வருகிறார்.

  சீரியலில் பார்ப்பதற்கும், இன்ஸ்டாகிராமில் இருப்பதற்கும் நேரெதிராக அவர் இருப்பதாக தெரிவிக்கும் நெட்டிசன்கள், அவரா இது? என புகைப்படத்தையும், வீடியோவையும் பார்த்து வாயை பிளக்கின்றனர். மேலும், சன் மியூசிக் தொலைக்காட்சியில் சாட் பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்திருக்கும் கருத்து, இப்போது வைரலாகியுள்ளது.

  Also Read : தொடரும் பிக்பாஸ் சர்ச்சை... அனிதா சம்பத் - பிரபல தயாரிப்பாளர் இடையே முற்றும் மோதல்!

  அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், உங்களை அதிகம் தொந்தரவு செய்யும் நபர் யார் என? நிமிஷிகாவிடம் கேட்கிறார். சற்றும் யோசிக்காமல் பதில் அளிக்கும் நிமிஷிகா, கண்ணான கண்ணே சீரியலில் தனக்கு ஜோடியாகவும், ஹீரோவாகவும் நடிக்கும் ராகுல் என கூறுகிறார். என்ன தொந்தரவு செய்கிறார்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அங்கே இங்கே நோண்டிக் கொண்டிருப்பார், கிள்ளுவார் என கூறியுள்ளார். சாட் பாக்ஸ் நிகழ்ச்சியில் புரோமிவில் நிமிஷிகாவின் இந்த பதில் இடம்பெற்றுள்ளது. என்ன இவ்ளோ ஓபனா பேசுறீங்க? என தொகுப்பாளரே ஒரு நிமிஷம் ஷாக்காகிட்டார்.   
  View this post on Instagram

   

  A post shared by Sun Music (@sunmusic_offl)


  நெட்டிசன்களும், நிமிஷிகா வெளிப்படையாக பேசுகிறார் என்றும், அவரின் கியூட்னஸ் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும் கமெண்ட் அடித்துள்ளனர். சன் டீவியில் நிறைய சீரியல்கள் ஒளிரப்பாகி வந்த நிலையில், கொரோனா காரணமாக அதன் சூட்டிங் நிறுத்தப்பட்டன. சில சீரியல்களின் சூட்டிங் இன்டோரில் நடத்தப்பட்டது. குறிப்பாக, சன் தொலைக்காட்சியின் அலுவலகத்திலேயே நடத்தப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நடிகர், நடிகைகளும் கொரோனா அச்சம் காரணமாக சீரியல் சூட்டிங்கில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது சூட்டிங்கில் இணைந்துள்ளன. கண்ணான கண்ணே சீரியலிலும் சில நடிகர்கள் மட்டுமே சூட்டிங்கில் பங்கேற்றதால், அவர்களை வைத்து மட்டுமே கதைக்களம் நகர்ந்து கொண்டிருந்தது. அனைத்து நடிகர்களும் தற்போது படப்பிடிப்புக்கு வரத் தொடங்கியுள்ளதால், கதைக்களங்கள் மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Also Read : சன் டிவி-யில் ரீ எண்ட்ரியான நடிகர் அசீம் - எந்த சீரியல் தெரியுமா?

  கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியலில் நிமிஷிகா மற்றும் ராகுல் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். பப்ளு, டெல்னா டேவிஸ், நித்யா தாஸ், பிரியங்கா நல்கரி, ரேஷ்மா, நித்யா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 100வது எபிசோடை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சீரியலை இயக்குநர் தனுஷ் இயக்கி வருகிறார். காதல் மற்றும் குடும்பத்தை கதைக்களமாக கொண்டு நகரும் கண்ணானே கண்ணே சீரியலுக்கு பாரதி கண்ணன் திரைக்கதை எழுதுகிறார்.
  Published by:Vijay R
  First published: