• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் டிவிஸ்ட்: அடம்பிடிக்கும் பிரசாந்த்... கண்ணன் - ஐஸ்வர்யா காதலுக்கு செக்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் டிவிஸ்ட்: அடம்பிடிக்கும் பிரசாந்த்... கண்ணன் - ஐஸ்வர்யா காதலுக்கு செக்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வரன் பார்க்கப்பட்டுள்ள பிரசாந்துக்கு, கண்ணன் - ஐஸ்வர்யாக காதல் விஷயம் தெரிய வருகிறது.

  • Share this:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் - ஐஸ்வர்யா காதலுக்கு பிரசாந்த் செக் வைக்கும் புரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் கடந்த சில நாட்களாக அண்ணி தனத்தின் வளைக்காப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வளைக்காப்பு நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தனத்தை வாழ்த்தினர். கூட்டுக்குடும்பமாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அண்ணியாக இருந்த தனம், வளைக்காப்பு முடிந்த பிறகு தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்கிறாள். அவர் செல்லும்போது வீடே சோகத்தில் மூழ்குகிறது.

கணவரிடம், நான் போய்ட்டு வர்ரேன் மாமா என தனம் சொல்ல, சோகத்தில் இருக்கும் மூர்த்தி ‘ நீ ஒன்னும் கவலைப்படதா தனம், பத்திரமா போய்டு வா, தினம்தோறும் உன்னை பார்க்க வர்றேன் என சொல்கிறான். பின்னர், ஜீவாவிடம் போய் கூறும்போது அவன் அழுதவாறு நீங்கள் இங்கே இருங்க அண்ணி, எங்கள விட்டுட்டு போகாதீங்க என கூறுகிறான். கொஞ்ச நாள்ல திரும்பி வந்திடுவேன் என கூறும் தனம், கதிரிடமும் சொல்கிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவனும் சீக்கீரம் வந்திடுங்க அண்ணி எனக் கூறுகிறான். இதற்கு இடையில், வளைகாப்பு நிகழ்ச்சியின்போது ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த கண்ணன், அண்ணி நா உங்க கூடவே வந்திடாவா? என கேட்டு அழுகிறான். இது ஒரு புறம் சோகக் கதையாக இருந்த நேரத்தில் புதிய டிவிஸ்ட் நாடகத்தில் வந்துள்ளது.




ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வரன் பார்க்கப்பட்டுள்ள பிரசாந்துக்கு, கண்ணன் - ஐஸ்வர்யாக காதல் விஷயம் தெரிய வருகிறது. ஐஸ்வர்யாவே நேரடியாக சென்று கண்ணனை காதலிக்கும் விஷயத்தை பிரசாந்திடம் கூறுகிறாள். அந்த நேரத்தில் மூர்த்தி வீட்டுக்கு செல்லும் ஐஸ்வர்யாவின் பெற்றோர், சீக்கிரம் ஐஸ்வர்யா - பிரசாந்த் திருமணத்தை நடத்த இருப்பதாகவும், அதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கண்ணன், ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து, திருமண தேதி முடிவு செய்த விஷயத்தைக் கூறுகிறான்.

Also read... இதயத்தை திருடாதே சீசன் 2-வில் இணைந்த பிரபல சீரியல் நடிகை

ஐஸ்வர்யாவோ, காதல் விஷயத்தை பிரசாந்திடம் கூறிவிட்டதால், அவர் எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திவிடுவார் என கூறுகிறாள். கண்ணனிடம் ஐஸ்வர்யா போன் பேசும்போது பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் பிரசாந்த், ஐஸ்வர்யாவின் போனை வாங்கி, நான் என்ன முட்டாளா? எனக்கு ஒன்னு வேணும்னா, அது வேணும் என தீர்க்கமாக கூறிவிடுகிறான்.

அவனுடைய பேச்சைக் கேட்டு ஐஸ்வர்யாவும், போனில் லைனில் இருக்கும் கண்ணனும் அதிர்ச்சியடைகின்றனர். இதனால், கண்ணன் - ஐஸ்வர்யா காதலில் புதியப் பிரச்சனை முளைத்துள்ளது. இந்தப் பிரச்சனையைக் கடந்து அவர்கள் எப்படி திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: