Pandian Stores : கண்ணன் - ஐஸ்வர்யா ரகசிய திருமணம்..அடுத்து நடக்கப்போவது என்ன ?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்

யாருக்கும் தெரியாமல் கோவிலுக்கு சென்று கண்ணன், ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்வது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கண்ணன் - ஐஸ்வர்யா காதல் விவகாரம் இப்போதைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸின் மூர்த்தி, ஜீவா, கதிர் ஆகியோரின் கடைசி தம்பியான கண்ணன், தனது அண்ணியின் அண்ணன் மகளான ஐஸ்வர்யாவை காதலிக்கிறான். இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட அத்தாச்சி கஸ்தூரி, கண்ணனை கண்டித்து வைக்குமாறு குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார்.

மேலும், ஐஸ்வர்யாவுக்கு பிரசாந்த் என்பவருடன் திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கண்ணன் - ஐஸ்வர்யா காதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கண்ணனை காதலிப்பதை பிரசாந்திடம் தெரிவிக்கும் ஐஸ்வர்யா, தங்களது காதலுக்கு உதவுமாறு கேட்கிறார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பிரசாந்த், ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான். ஐஸ்வர்யாவின் பெற்றோரும், திருமண தேதியை குறித்துவிடுகிறார்கள்.



இந்தநேரத்தில் தன்னுடைய காதலை வீட்டில் தெரிவிக்க பயந்து கொண்டிருக்கும் கண்ணன், திருமண தேதி நிச்சயிக்கப்பட்டதை கேட்டதும் அதிர்ச்சியடைகிறான். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணனும், ஐஸ்வர்யாவும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஐஸ்வர்யாவுக்கு கண்ணனுடன் திருமணம் நடக்குமா? அல்லது பிரசாந்துடனா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் எழுந்திருந்தது. இந்தநேரத்தில், இப்போது வெளியாகியிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸின் புதிய புரோமோவில் பெரிய டிவிஸ்ட் ஒன்றைக் காட்டியுள்ளனர். அதில், கண்ணனும், ஐஸ்வர்யாவும் யாருக்கும் தெரியாமல் கோவிலில் சென்று திருமணம் செய்து கொள்கின்றனர்.



அந்த புரோமோவில், பாண்டியன் ஸ்டோர்ஸின் வீட்டுக்குள் கோபமாக நுழையும் கஸ்தூரி அத்தாச்சி, அந்த கண்ணன் எங்கே போனான் என்று கேட்கிறார்.



 

அதற்கு பதிலளிக்கும் அண்ணி தனம், இப்ப நீங்க எதுக்கு கண்ணனை தேடுறீங்க என்று கேட்கிறார். அதற்கு கஸ்தூரி, அந்த கண்ணன்தான் ஐஸ்வர்யாவை கூட்டிட்டு ஓடிப் போயிட்டானாம் என்று கோபமாக கூறுகிறார். இதைக்கேட்ட சத்திய மூர்த்தி, “உங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிபோச்சா” என்று கேட்கிறார்.


தனமும் கண்ணன் அப்படிபட்ட பையன் இல்லை என்று கூறுகிறார். சத்தியமூர்த்தி தனது தம்பிகள் ஜீவா மற்றும் கதிரிடம் போய் கண்ணனை கூட்டிட்டு வாடா என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் தம்பி கண்ணனை தேடி ஒரு கோயிலுக்கு போகிறார்கள். அங்கே கண்ணன், ஐஸ்வர்யா கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். அப்போது பிர்சாந்த்தும் வந்து நிற்கிறான். யாரும் எதிர்பார்க்காத இந்த டிவிஸ்டால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அடுத்த என்ன நடக்கப்போகிறது? என்பது இப்போதைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: