• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக மீண்டும் கருத்து... சர்ச்சையில் சிக்கும் நடிகை கங்கனா

விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக மீண்டும் கருத்து... சர்ச்சையில் சிக்கும் நடிகை கங்கனா

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

விவசாயிகளின் போராட்டம் குறித்து நடிகை கங்கனா ரணாவத், ட்விட்டரில் பதிவிட்டுள்ள புதிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.

  • Share this:
    வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் மூன்று சட்டங்களைக் கொண்டுவந்தது. அந்த வேளாண் சட்டங்களுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்புகள் இருந்துவந்த நிலையில், ’டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் குறித்து நடிகை கங்கனா ரணாவத், ட்விட்டரில் பதிவிட்டுள்ள புதிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. தொடக்கம் முதலே விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக பேசி வரும் கங்கனா, போராட்டங்கள் குறித்து ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ ஒன்றைக் குறிப்பிட்டு விவசாயிகள் தற்போது நடத்தி வரும் பந்த்தை கொச்சைப் படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

    Also read: விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகி கைது..

    அவரது சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே மூதாட்டி ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டதை ஷாகின்பாக் போராட்டக்காரர் என்று ட்விட்டரில் கங்கனா பதிவிட்டார். கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அவர் சர்ச்சைப் பதிவை நீக்கினார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: