மணிகர்ணிகா ரிட்டன்ர்ஸ்.. காஷ்மீர் ராணியாக நடிக்கும் கங்கனா ரனாவத்.. ட்விட்டர்வாசிகள் எதிர்பார்க்கும் மற்றுமொரு வரலாற்று படம்..

மணிகர்ணிகா ரிட்டன்ர்ஸ்.. காஷ்மீர் ராணியாக நடிக்கும் கங்கனா ரனாவத்.. ட்விட்டர்வாசிகள் எதிர்பார்க்கும் மற்றுமொரு வரலாற்று படம்..

கங்கனா ரனாவத்

மெகமூத் கன்சாவியை (Mehmood Ghaznavi) இருமுறை வீழ்த்திய காஷ்மீர் ராணி டிடாவாக (Queen Didda), தான் நடிக்க இருப்பதாக கங்கனா ரனாவத் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

  • Share this:
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு மணிகர்ணிக்கா; தி குயின் ஆப் ஜான்சி ( Manikarnika: The Queen Of Jhansi) என்ற வரலாற்று திரைப்படம் வெளியானது. சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை துணிவுடன் எதிர்த்து போராடிய வீரமங்கை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் நாடு முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 150 ரூபாய் கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. படம் வெளியான அந்த சமயத்தில் தான், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துக் கொண்டார். அவர் மரணத்துக்கு பாலிவுட் மாஃபியாவே காரணம் என வெளிப்படையாக குற்றம்சாட்டிய கங்கனா ரனாவத், "கான்" நடிகர்களின் ஆதிக்கத்தால் பல நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுவதாக பகிரங்கமாக போட்டுடைத்தார்.

இது பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், ஜான்சிராணி படத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு தரப்பினர் படம் தோல்வியை தழுவியதாக கூறினாலும், படம் பெரும் வெற்றியை ஈட்டியதாக கங்கனா ரனாவத்தின் தங்கை கூறியிருந்தார்.

ALSO READ | ’மாஸ்டர்’ படபிடிப்பு தளத்தில் கேஷுவல் க்ளிக் - விஜய்யின் வாவ் படங்கள்!

இந்தநிலையில் டிவிட்டரில் தனது அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், மணிகர்ணிக்கா ரிட்டன்ர்ஸ்; தி லெஜண்ட் ஆப் டிட்டா (Manikarnika Returns: The Legend Of Didda) என படத்தின் டைட்டிலையும் அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் மெகமூத் கன்சாவியை (Mehmood Ghaznavi) ஒருமுறையல்ல, இரண்டு முறை வீழ்த்தியவர் ராணி டிட்டா எனத் தெரிவித்துள்ளார். ராணி டிட்டா போலியோவால் பாதிக்கப்பட்டவர் ஆவர். இதனால் அவரின் ஒருகால் செயல்படாது. உடல் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய வீரம் மற்றும் தைரியத்தால் ஒன்றுபட்ட காஷ்மீரில் 40 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தியவர்.

இந்தப் படத்தின் டைரக்டர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. கங்கனா ரனாவத் டைரக்ட் செய்கிறாரா அல்லது ஜான்சி ராணி படத்தை இயக்கிய கிரிஷ் இயக்க உள்ளாரா என்பது தற்போது வரை சூட்சமமாக உள்ளது. ஜான்சி ராணி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கமல் ஜெயின், இந்த புதிய படத்தையும் தயாரிக்கவுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் கமல்ஜெயினும், கங்கனா ரனாவத்தும் கடந்த ஒருவாரமாக விவாதித்ததாகவும், பின்னர் கதையை இறுதி செய்து அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ | மகளுடன் சைக்கிள் பயணம் சென்ற நடிகர் அரவிந்த்சாமி

கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தயாரிப்பாளர் கமல்ஜெயினும், கங்கனா ரனாவத்தும் அமர்ந்திருக்கின்றனர். ஏற்கனவே நடித்துக்கொண்டிருக்கும் தலைவி, தாக்காட், தேஜாஸ் திரைபடங்களை முடித்த பின்னர், மணிக்கர்ணிக்கா ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் கங்கனா நடிக்க இருக்கிறார். 2022 ஆம் ஆண்டுக்குள் படத்தின் படப்பிடிப்பை முடித்து அதே ஆண்டில் திரையிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Sankaravadivoo G
First published: