முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

தலைவி

தலைவி

ஜீவா இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான கங்கனா ரனாவத், நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் குயின் கங்கனா ரனாவத்தின் 32வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கங்கனா ரனாவத் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக ‘தலைவி’ படத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ள தகவலை வெளியிட்டுள்ளார்.

மதராசபட்டினம், தலைவா, தேவி படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய், ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்குவதாக அறிவித்தார். அந்த படத்திற்கு தலைவி என்ற டைட்டிலையும் வெளியிட்டார். ஆனால், யார் ஜெயலலிதாவாக நடிக்கப் போகிறார் என்ற தகவலை வெளியிடவில்லை.

ஜெயலலிதா பயோபிக்கில் கங்கனா

வித்யாபாலன் ஜெயலலிதாவாக நடிப்பார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது, தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் ‘தலைவி’ என்றும் இந்தியில் ‘ஜெயா’ என்றும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

ஜீவா இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுகமான கங்கனா ரனாவத், நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.

Also See..

First published:

Tags: Jayalalithaa