Home /News /entertainment /

இதுவும் ஒரு ஜிகாதி தேசமே - வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்புக்கு நடிகை கங்கனா ரனாவத் அதிருப்தி

இதுவும் ஒரு ஜிகாதி தேசமே - வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்புக்கு நடிகை கங்கனா ரனாவத் அதிருப்தி

Kangana Ranaut

Kangana Ranaut

தெருவில் உள்ளவர்கள் சட்டத்தை இயற்றினால் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான். இதனை இவ்வாறே நடக்க விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என கங்கனா தெரிவித்திருக்கிறார்.

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்த நிலையில், இது வெட்கக்கேடானது, முற்றிலும் நியாயமற்றது என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் அதிக அளவில் திரண்டு டெல்லி எல்லைகளில் அங்கேயே தங்கி போராடி வந்தனர். பின்னர் மத்திய அரசு புதிய சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவித்து பல மாதங்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது அறிவித்தார். அத்துடன் போராட்டம் நடத்தும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Also read:  மது குடிப்பவர்கள் பொய் பேச மாட்டார்கள் - அரசு அதிகாரியின் பகீர் லாஜிக்

விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இதனை விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பிரதமரின் அறிவிப்புக்கு பல்வேறு கட்சியினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதனிடையே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறும் முடிவுக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அதிருப்தி தெரிவித்துள்ளார். அகான்ஷா சாந்தில்யா என்பவரின் இன்ஸ்டா போஸ்டை தனது இன்ஸ்டா ஸ்டோரிஸில் பதிவிட்டு அதன் கீழ் கங்கனா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

image

“இது சோகமான, வெட்கக்கேடான, முற்றிலும் நியாயமற்ற ஒன்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் தெருவில் உள்ளவர்கள் சட்டத்தை இயற்றினால் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான். இதனை இவ்வாறே நடக்க விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என கங்கனா தெரிவித்திருக்கிறார்.

தனது அடுத்த இன்ஸ்டா ஸ்டோரிஸில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகை கங்கனா அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, ​​கட்டை மட்டுமே தீர்வு மற்றும் சர்வாதிகாரம் மட்டுமே தீர்மானம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம் பிரதமர்” என தெரிவித்துள்ளார்.

 
Published by:Arun
First published:

Tags: Farmers Protest, Kangana Ranaut, Modi

அடுத்த செய்தி