முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காயத்ரியிடம் பரதநாட்டியம் பயிலும் கங்கனா.. ஜெயலலிதா பயோபிக்கிற்காக தீவிர பயிற்சி

காயத்ரியிடம் பரதநாட்டியம் பயிலும் கங்கனா.. ஜெயலலிதா பயோபிக்கிற்காக தீவிர பயிற்சி

கங்கனா மற்றும் காயத்ரி ரகுராம்

கங்கனா மற்றும் காயத்ரி ரகுராம்

அர்ப்பணிப்பும் , தன்னடக்கமும் கொண்ட சிறந்த நடிகை. வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட கங்கனா எதையும் கூர்ந்து கவனித்து செயல்படுத்தக் கூடிய நபராக இருக்கிறார். அவர் உண்மையான கலைஞர் என காயத்ரி புகழாரம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தலைவா, தெய்வத் திருமகள் போன்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்த ஏ.எல் விஜய் அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவுள்ளார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

அந்தப் படத்திற்கு ’தலைவி’ என்ற பெயர் வைத்து ஜெயலலிதாவின் பாத்திரத்தை பாலிவுட் குயின் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். அதற்காக கங்கனா தற்போதிலிருந்தே ஜெயலலிதாவாக வாழ்ந்து வருகிறார்.

”ஜெயலலிதா சந்தித்த சிக்கல்களை நானும் சந்தித்திருப்பதால், எனக்கு நெருக்கமான கதையாக இருக்கிறது. அதற்காகவே இந்த படத்தைத் தேர்வு செய்தேன்” என இந்த படத் தேர்வுக் குறித்து கங்கனாவும் கூறியிருந்தார்.

கதைக்காக ஜெயலலிதாவின் உருவத்தை கங்கனாவிற்கு அப்ளை செய்ய ரோஸ்தெடிக் மேக்அப் சமீபத்தில்தான் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து தற்போது கங்கனா பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறார். இதற்காக பிக்பாஸ் புகழ் மற்றும் நடன இயக்குநரான காயத்ரி ரகுராமிடம்தான் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறார்.


இதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கிறார். கங்கனாவின் குழு தான் அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்கின்றன. அந்தவகையில் அந்த டீம் “ இன்று காலையிலிருந்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்காக பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் பயிற்சியில் கங்கனா இறங்கியுள்ளார் “ என்று குறிப்பிட்டுள்ளது.

அதோடு பரதநாட்டியம் கற்றுத் தரும் காயத்ரி ரகுராம் தனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ அர்ப்பணிப்பும் , தன்னடக்கமும் கொண்ட சிறந்த நடிகை. விரைவில் கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட கங்கனா எதையும் கூர்ந்து கவனித்து செயல்படுத்தக் கூடிய நபராக இருக்கிறார். அவர் உண்மையான கலைஞர். மொத்தத்தில் அவரை ’வேற லெவல்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


இப்படி கங்கனாவின் முழுமையான அர்ப்பணிப்பு ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தையும் வேற லெவலில் நடிப்பாரா என்று எதிர்பார்க்க வைக்கிறது.

பார்க்க :

கீழடி : தமிழனின் பூர்வ கதை!

First published:

Tags: Gayathri Raghuram, Jayalalithaa, Kangana Ranaut