• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகை இவர்தான்!

இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகை இவர்தான்!

கங்கனா ரெனாவத்

கங்கனா ரெனாவத்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ரூ.14 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாறு மணிகர்ணிகா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ளார். பாகுபலி படத்தில் பணியாற்றிய விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை அமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நடிகை கங்கனா ரனாவத் ரூ.14 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய நடிகைகள் எவரும் இதுவரை இந்த அளவு சம்பளம் பெற்றதில்லை. இதற்குக் காரணம் பொதுவாக இந்திப் படங்களுக்கு உலகளாவிய அளவில் வணிகம் உள்ளது. அதேபோல் பாலிவுட் நடிகர்கள், நடிகைகளுக்கு உலகளாவிய ரசிகர்கள் உள்ளனர். பிரியங்கா சோப்ரா, எமி ஜாக்‌ஷன் உள்ளிட்ட சிலர் ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரியஸில் நடித்து வருகின்றனர். இதனால் அவர்கள் அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.



    கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ரூ.13 கோடி பெற்று நடிகை தீபிகா படுகோனே முதல் இடத்தில் இருந்தார். இதையடுத்து நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான க்வீன் படம் வசூலில் சாதனை படைத்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுத் தந்தது. அதன் பின்னர் தனது சம்பளத்தைக் கூட்டி இருக்கும் கங்கனா ரனாவத் தற்போது ரூ.14 கோடி பெற்றுள்ளார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.



    முத்தம் கேட்ட இயக்குநர்-யாஷிகா ஆனந்த் குற்றச்சாட்டு - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: