சோனுசூட் மோசடிக்காரர்... வம்புக்கு இழுக்கும் கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத், சோனுசூட்

சந்தையில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் சிலிண்டர்களுக்கு பெரும் டிமாண்ட் நிலவி வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா காலத்தை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்தும் நடிகர் சோனுசூட் மோசடிக்காரர் என நெட்டிசன் பதிவிட்டதை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் லைக் செய்துள்ளார்.

ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் பலர் சிகிச்சைக் கிடைக்காமல் இறந்து வருகின்றனர். இதனால், சந்தையில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் சிலிண்டர்களுக்கு பெரும் டிமாண்ட் நிலவி வருகிறது. இந்த சூழலில், நிறுவனம் ஒன்றின் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை நடிகர் சோனுசூட் புரோமோட் செய்யும் புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சோனுசூட் புகைப்படத்துடன், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் ரூ.2 லட்சம் மட்டுமே என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், கொரோனா காலத்தைப் பயன்படுத்தி நடிகர் சோனுசூட் பணம் சம்பாதிக்கும் 'மோசடிக்காரர்' வசைபாடியுள்ளார். மேலும், தனது டிவிட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும் TAG செய்திருந்தார்.

சோனுசூட்டை விமர்சிக்கும் அந்த டிவிட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் லைக் செய்துள்ளார். இதனால் சோனுசூட் மோசடிக்காரர் என நெட்டிசன் கூறியதை கங்கனாவும் அமோதிக்கிறரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டே அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் தெர்மோமீட்டர் பிராண்டுக்காக நடிகர் சோனுசூட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த தகவல், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. சரியான மெடிக்கல் உபகரணங்களை உபயோகப்படுத்துவது குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சோனுசூட் கூறியிருந்தார். அந்த பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போது நாட்டில் நிலவும் சூல்நிலைக்கு ஏற்ப சிலர் பரப்பி வருகின்றனர். கங்கனா ரனாவத்துக்கும், சோனுசூட்டுக்கும் இடையே ஏற்கனவே புகைச்சல் இருந்து வருகிறது.

Also read... ’அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை முதல்முறையாக பார்க்கிறேன்’ - வெங்கட் பிரபு!

கங்கனாவின் மணிகர்னிக்கா படத்தில் சோனுசூட் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கதை பிடிக்கவில்லை எனக் கூறி அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அந்த நேரத்தில் பெண் இயக்குநருக்கு கீழ் வேலை செய்ய சோனுசூட்டுக்கு பிடிக்கவில்லை என கங்கனா சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்த சோனுசூட், தன்னிடம் கூறிய கதைப்படி படம் எடுக்கப்படவில்லை எனக் கூறினார். தன்னுடைய 80 விழுக்காடு காட்சிகள் நீக்கப்பட்டதால் படத்தில் இருந்து விலகியதாகவும், சூட்டிங் ஸ்பாட்டில் கங்கனாவின் அணுகுமுறையும் சரியாக இல்லை என பதில் அளித்திருந்தார்.

நடிகர் சோனு சூட், கடந்த ஆண்டு திடீரென மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கத்தால் அவதிப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தன்னால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்தார். பேருந்து, ரயில் என அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்து சென்றவர்களுக்கு சொந்த செலவில் பேருந்து வசதி செய்து கொடுத்தார். தற்போதும், ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்படுபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். அவரின் தொடர் மனிதநேயமிக்க செயலை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அண்மையில் வெகுவாக பாராட்டினார்.

அதேநேரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க மக்கள் அனைவரும் மரம் நட வேண்டும், அதுவே நிரந்தர தீர்வு என கங்கனா ரனாவத் கூறியிருந்தார். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் போராடிக்கொண்டிருக்கும் சூழலில் தற்போது மரம் நட்டு, அதன்மூலம் ஆக்சிஜன் பெற்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியுமா? என பலர் கங்கனா ரனாவத்தை கடுமையாக சாடியிருந்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: