தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தின் 'கண்டா வரச்சொல்லுங்க!' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

தனுஷின் கர்ணன்

இப்பாடலை கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர். கிராமத்து வாசனை வீசும் வகையிலான இப்பாடல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

  • Share this:
இயக்குனர் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் 'கண்டா வரச்சொல்லுங்க!' என்ற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். யதார்தமான கதைக் களத்தை கொண்ட பரியேறும் பெருமாள் சாதிய ஒடுக்குமுறைகளை எடுத்துரைக்கும் படமாக அமைந்தது. மாரி செல்வராஜின் படைப்பு அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுத்தந்த நிலையில் தற்போது இவரின் அடுத்த படமான கர்ணன் - ல் நடிகர் தனுஷை இயக்கியுள்ளார்.

தனுஷின் கர்ணன்


இப்படத்தில் கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால், நகைச்சுவை நடிகர் யோகி பாபு லட்சுமி பிரியா, கவுரி கிஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். கலைப்புலி தானு தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்திருப்பதாக சமீபத்தில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதே போல இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற்றது.இந்நிலையில் தற்போது கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்டா வரச்சொல்லுங்க!' என்ற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இப்பாடலை கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர். கிராமத்து வாசனை வீசும் வகையிலான இப்பாடல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Published by:Arun
First published: