• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணில் மையிட்டு மிரட்டும் அக்‌ஷய்குமார்... காஞ்சனா இந்தி ரீமேக் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கண்ணில் மையிட்டு மிரட்டும் அக்‌ஷய்குமார்... காஞ்சனா இந்தி ரீமேக் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

லக்‌ஷ்மி பாம் படத்தில் அக்‌ஷய் குமார்

லக்‌ஷ்மி பாம் படத்தில் அக்‌ஷய் குமார்

கண்ணுக்கு மையிட்ட வண்ணம் வித்தியாசமாக தோன்றியுள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியில் உருவாகும் காஞ்சனா பட ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும், ஹீரோயினாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    த்ரில்லர் பேய் படமாக உருவான இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரும் வண்ணம் காமெடி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் தமிழில் வெளியான இந்தப் படத்தின் 3-வது பாகமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

    8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். ‘லக்‌ஷ்மி பாம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கியாரா அத்வானி ஜோடி சேர்ந்துள்ளார். சரத்குமார் நடித்திருந்த திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



    அக்‌ஷய்குமாருக்காக படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். தமிழில் பேய்க்கு பயந்தவராக லாரன்ஸ் நடித்திருந்த நிலையில் அக்‌ஷய்குமார் பேய்க்கு பயப்படாதவராக நடிக்கிறார்.

    கடந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.



    அதில் கண்ணுக்கு மையிட்ட வண்ணம் வித்தியாசமாக தோன்றியுள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    வீடியோ பார்க்க: தல 60 அப்டேட்: 13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: