• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'காஞ்சனா' இந்தி ரீமேக் - டைட்டிலுடன் புகைப்படம் வெளியிட்ட லாரன்ஸ்

'காஞ்சனா' இந்தி ரீமேக் - டைட்டிலுடன் புகைப்படம் வெளியிட்ட லாரன்ஸ்

அக்‌ஷய்குமாருடன் ராகவா லாரன்ஸ்

அக்‌ஷய்குமாருடன் ராகவா லாரன்ஸ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் லாரன்ஸுடன் இணைந்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும், ஹீரோயினாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    த்ரில்லர் பேய் படமாக உருவான இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரும் வண்ணம் காமெடி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 3-வது பாகம் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது.

    இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். லக்‌ஷ்மி பாம்ப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கியாரா அத்வானி ஜோடி சேர்ந்துள்ளார். சரத்குமார் நடித்திருந்த திருநங்கை கதாபாத்தில் நடிகர் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதேவேளையில் நடிகர் அக்‌ஷய்குமாருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் லாரன்ஸ், அக்‌ஷய்குமார் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு விஸ்வாசம் பட ஒளிப்பதிவாளர்  வெற்றி இணைந்துள்ளார்.





    மேலும் படப்பிடிப்பை நடிகை கியாரா அத்வானி க்ளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார்.

    சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ: நீதானே என் பொன்வசந்தம்...!






    சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: