பிக்பாஸ் அல்லது குக் வித் கோமாளி... எதில் பங்கேற்க விருப்பம்? ரசிகர்களின் கேள்விக்கு இர்ஃபான் பதில்!

இர்ஃபான் முகமது

சினி துறையில் டைரக்‌ஷனை நோக்கமாக கொண்டே இருந்த இர்ஃபான், அதற்காக பெங்களூரு சென்று சில கோர்ஸ்களையும் படிந்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவி-யில் பல மெகாஹிட் சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காமல் இடம் பெற்றிருக்கும் ஒன்று தான் கனா காணும் காலங்கள். 2006-ல் துவங்கிய இது அடுத்தடுத்து 4 சீசன்களாக ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தது. அப்படிப்பட்ட கனா காணும் காலங்கள் சீசன் 1-ல் நடித்தவர் தான் நடிகர் இர்ஃபான் முகமது. இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். கனா காணும் காலங்களில் வினித் என்ற கேரக்டரில் நடித்த இவர், கனா காணும் காலங்கள் மூலம் கிடைத்த புகழ் காரணமாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 2-வில் ஹீரோவாக நடித்தார்.

சீரியல் நன்றாக பொய் கொண்டிருந்த நேரத்தில் சில மாதங்களில் திடீரென அந்த சீரியலில் இருந்து நடிகர் இர்ஃபான் விலகினார். சின்னத்திரையில் ருந்து வெள்ளித்திரை நோக்கி பயணித்த இர்ஃபான் மெர்க்குரி பூக்கள் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பட்டாளம், ஏற்பாடு மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், எதிர் வீச்சு, கோல், பொங்கி எழு மனோகரா, அகம், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் ஆனால் சின்னத்திரை கைகொடுத்த அளவு வெள்ளித்திரை இன்னும் இவருக்கு வசமாகவில்லை என்று தான் கூற வேண்டும். சீரியல் தந்த பாப்புலாரிட்டி கூட தான் ஹீரோவாக நடித்த படங்கள் தரவில்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினி துறையில் டைரக்‌ஷனை நோக்கமாக கொண்டே இருந்த இர்ஃபான், அதற்காக பெங்களூரு சென்று சில கோர்ஸ்களையும் படிந்துள்ளார். இடையில் நடிப்பை நோக்கி தனது திரை பயணத்தை மாற்றியதால் எதிர்பார்த்த வெற்றி பெற முடியாமல் இருந்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் இர்ஃபானை, ஏராளமானோர் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வருகின்றனர். சமீபத்தில்ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் Q&A session-ஐ இன்ஸ்டாவில் நடத்தினார். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், குக் வித் கோமாளி சீசன் 2-வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை தான் நழுவ விட்டுவிட்டதாக குறிப்பிட்டார்.

Also read... அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் - எந்தப் படத்தின் தழுவல் தெரியுமா?

பிக்பாஸ் அல்லது குக் வித் கோமாளி இந்த இரு நிகழ்ச்சிகளில் இதில் பங்கேற்க அழைத்தால் நீங்கள் போவீர்கள் என்ற கேள்விக்கு, நிச்சயமாக பிக்பாஸ் இல்லை. ஏனென்றால் எனக்கு நாடகம் போடுவது அல்லது சண்டையிடுவதெல்லாம் பிடிக்காது. எனவே எனக்கெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி செட் ஆகாது. நான் இப்போது சமைக்க கற்றுள்ளேன் என்பதால் குக் வித் கோமாளி சீசன் 3-யில் பங்கேற்க ஆவலாக இருக்கிறேன். என்னை குக் வித் கோமாளிக்கு அழைத்தால் தவறாமல் நிச்சயம் பங்கேற்பேன் என்று நடிகர் இர்ஃபான் பதில் அளித்துள்ளார். நடிகர் இர்ஃபான் குக் வித் கோமாளியில் பங்கேற்க ஆவல் தெரிவித்துள்ளதை அடுத்து இதன் 3-வது சீசனில் இவர் சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: