Pandian Stores: சூட்டிங் ஸ்பாட் லைவ் வீடியோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக தொலைக்காட்சி தொடர்களின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  • Share this:
பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை கம்பம் மீனா செல்லமுத்து பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக தொலைக்காட்சி தொடர்களின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சன்டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் முக்கியமான சீரியல்களின் சூட்டிங் மட்டும் ஹோட்டல் மற்றும் Indoor சூட்டிங்கில் தொடர்ந்து நடத்தி வந்தனர். சில தொலைக்காட்சித் தொடர்கள் ஹைதராபாத் சென்று அங்கு சூட்டிங்கை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் டிவியில் ஒளிரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், அந்த சீரியலை நிறுத்தாத தொலைக்காட்சி நிர்வாகம், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களுடன் இணைந்து மெகா சங்கமம் என்ற புதிய கான்செப்டை உருவாக்கினர். இன்டோரில் சூட்டிங் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், இரண்டு தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வாக எபிசோடுகளை உருவாக்கினர். இதுவும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துக் கொள்ளும் நடிகர்களும், அங்கு நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை படம்பிடித்து தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர்.




அந்தவகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை கம்பம் மீனா செல்லமுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், சூட்டிங் இடையே நடிகர்கள் அமர்ந்து சாப்பிடுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஓ சூட்டிங் ஸ்பாட்ல இப்படி தான் இருப்பாங்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளனர். அண்மையில், ராஜா ராணி சீரியல் வில்லியான அர்ச்சனாவின் கன்னத்தில், பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா அறையும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. இந்த இரண்டு குடும்பங்களும் சங்கமிப்பதுபோல் காட்சிகள் உருவாக்கப்பட்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக சந்தித்துக் கொண்ட ராஜா ராணி வில்லியான அர்ச்சனாவும், பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பாவும் இன்ஸ்டாகிராமுக்காக நகைச்சுவையாக வீடியோ உருவாக்கினர்.

Also read... Prakash Raj: தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ்ராஜ்...!

அதில், அர்ச்சனா, வெண்பாவின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். சீரியலில் மோதிக்கொள்ளாத இருவரும் இன்ஸ்டாகிராமில் மோதிக்கொள்வதுபோல் நடித்து வெளியிட்ட வீடியோ, டிரெண்டிங்கிலும் இடம்பிடித்தது. வில்லத்தனம் மாறாமல் அவர்கள் இருவரும் வெளிப்படுத்திய நடிப்பு, பலராலும் ரசிக்கப்பட்டது. விஜய் டீவியில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸைப் பொறுத்த வரையில் கூட்டுக் குடும்ப கதைக்களத்தை மையமாகக்கொண்டது. அண்ணன், தம்பிகள் நான்கு பேர் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இடையே இருக்கும் பாசத்தையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டு விறுவிறுப்பாக சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதேபோல், பாக்கியலட்சுமி சீரியலும் குடும்பத்துக்குள் இருக்கும் உறவுச்சிக்கலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: