• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்தியன் 2 படப்பிடிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

இந்தியன் 2 படப்பிடிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்தியன் 2 படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    கடந்த 1996-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. வசூலைக் குவித்து ஹிட் அடித்த இந்தப் படத்தின் 2-வது பாகத்தை 22 வருடங்களுக்குப் பின்பு இயக்குநர் சங்கர் தற்போது இயக்குகிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் நாளைமுதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.



    இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களும் உறுதிசெய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு கமல்ஹாசனின் பேரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எதிர்பாராத சில காரணத்தால் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.



    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமான நடிகர் சித்தார்த் மீண்டும் 16 வருடங்கள் கழித்து சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேனா? - கமல் பேட்டி - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: